×

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் ஆயுள் குற்றவாளிக்கு ஜாமீன்

புதுடெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிக்கு உச்ச நீதிமன்றம்  ஜாமீன் வழங்கியது. குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002 பிப்ரவரி 27ல் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-6 கோச் எரிக்கப்பட்டதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பயங்கர கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து பலர் தண்டனை பெற்றுள்ளனர். இதில் ரயில் பெட்டி மீது கல்வீசிய வழக்கில் பரூக் உள்ளிட்ட பலர் ஆயுள்தண்டனை பெற்றனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தற்போது பரூக் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போது குஜராத் அரசு தரப்பில்,’ அவர்கள் வெறும் கல் வீச்சுக்காரர்கள் அல்ல. அவர்களால் எரியும் பெட்டியில் இருந்து மக்கள் தப்பிக்க முடியவில்லை’என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் மனுதாரர் 17 ஆண்டுகள் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு பரூக்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Tags : Godhra , Bail for life convict in Godhra train burning case
× RELATED பில்கிஸ் பானு வழக்கில் எதிரான கருத்தை...