புரோ கபடி லீக் அரையிறுதி போட்டி: ஜெய்ப்பூர் - பெங்களூர் புல்ஸ் தமிழ்தலைவாஸ்-புனேரி மோதல்

மும்பை: 9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணியுடன், பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டன் மோதுகிறது.

யு.பி. யோத்தாசுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் டைபிரேக்கரில் அபாரமாக ஆடி முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதிபெற்ற தமிழ் தலைவாஸ் அணி இன்றைய போட்டியிலும் அசத்துமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த இரு அணிகளும் ஏற்கனவே லீக்கில் தாங்கள் மோதிய ஆட்டங்களில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: