×

மார்கழி மாதத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடை திறப்பு, பூஜைநேரம் மாற்றம்: நிர்வாகம் அறிவிப்பு

தூத்துக்குடி: மார்கழி மாதத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடை திறப்பு, பூஜைநேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் ஜனவரி 15ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு திருச்செந்தூர் முருகன் கோயில் நடை திறக்கப்படும். காலை 3.30க்கு விஸ்வரூப தரிசனம், காலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 7.30க்கு உச்சி கால பூஜை, மாலை 6 மணிக்கு இரவு கால பூஜை நடக்கும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Trichendur Murugan Temple ,Margarzhi , Margazhi month, Tiruchendur Murugan Temple, opening of the walk, puja time
× RELATED ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த...