×

கீரிப்பாறை அருகே நடுரோட்டில் பெண்ணுக்கு இச்...இச்...: தொழிலாளி தப்பி ஓட்டம்

பூதப்பாண்டி: கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு (30). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் கீரிப்பாறை லேபர் காலனி அருகே நின்று கொண்டிருந்த ஜெரால்டு, அந்த வழியாக நடந்து வந்த திருமணமான சுமார் 39 வயது மதிக்கத்தக்க பெண்ணை திடீரென பாய்ந்து சென்று கட்டி பிடித்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் ெகாடுத்தார். இதில் அந்த பெண் நிலைகுலைந்து அலறினார்.

ஆத்திரமடைந்த ஜெரால்டு, அந்த பெண்ணை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். இதை பார்த்ததும் பொதுமக்கள் திரண்டதால் ஜெரால்டு தப்பினார். பாதிக்கப்பட்ட பெண், கீரிப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெரால்டை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Keeriparai , Girl in the middle of the road near Keeriparai...i...: Worker flees
× RELATED குமரியில் மழை: ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு