
சென்னை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தாமல் ஒரு மாநில அரசு இப்படி நடந்துகொள்வது இறையாண்மைக்கு சவாலாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.