எடப்பாடியுடன் இணைந்து செயல்படமாட்டோம்: டிடிவி.தினகரன் பேட்டி

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டி : நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சி ஒன்றுடன் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடும். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை தினமும் உறுதிப்படுத்தி வருகிறார். அதனால், அவரோடு ஒன்றிணைந்து செயல்பட மாட்டோம். அவரது 4 ஆண்டுகால திருவிளையாடலை மக்களால் பொறுத்து கொள்ள முடியாத சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. சந்தில் சிந்து பாடுவதுபோல் பேசும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். ஆளுநர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வரும் நிலையில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: