மீஞ்சூர் பகுதியில் மாவா தயாரித்து விற்ற 4 பேர் கைது

பொன்னேரி: மீஞ்சூரில் 4 இடங்களில் வீட்டில் மாவா தயாரித்து விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து  3 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு தடை செய்யப்பட்ட மாவா பொருட்களை மிக்சியில் அரைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வருவதாக மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் டில்லிபாபு ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார், மீஞ்சூர் பகுதிகளில் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.  

அப்போது, மீஞ்சூர் லால்பகதூர் சாஸ்திரி தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, ராமா ரெட்டியா பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மூலப்பொருட்களை பதுக்கிவைத்து மிக்சிகளில் அரைத்து மாவா தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக சக்திவேல் (35), சுமன் (22), செந்தில்குமார் (37), சூர்யா (40)  ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  பின்னர் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 3 கிலோ மாவா, மாவா அரைக்க பயன்படுத்தப்பட்ட மிக்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மேற்பட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: