×

திரிபுரா, கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ், பாஜ போட்டா போட்டி: தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: கர்நாடகா, திரிபுரா  சட்டப்பேரவை தேர்தல் குறித்து, பாஜ மற்றும் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடந்தது. திரிபுரா மாநிலத்தில் முதல்வர் மாணிக்  சாஹா தலைமையிலும், கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை  தலைமையிலும் பாஜ ஆட்சி நடக்கிறது. 60 உறுப்பினர்களை கொண்ட திரிபுரா  சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த மார்ச் மாதம் முடிகிறது. இதனால்  பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. 224 தொகுதிகளை கொண்ட  கர்நாடகா சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் முடிவடைகிறது.

இந்த மாநிலத்திலும் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜ இப்போதே தேர்தல் பணிகளை  தொடங்கி உள்ளது. இரு மாநிலங்களிலும் குஜராத் வெற்றியை வைத்தே தேர்தலை சந்திக்க பாஜ  தயாராகி வருகிறது. அதன்படி, திரிபுரா சட்டப்பேரவை குறித்து அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜ உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தலுக்காக 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலை திறம்பட கையாள ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  வடகிழக்கு மாநில பாஜ மூத்த  தலைவர் மகேந்திர சிங் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது போன்று, கர்நாடகாவிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, கர்நாடகா தேர்தலுக்கு முன்னேற்பாடுகளை கார்கே தொடங்கி உள்ளார். அதன்படி, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல், தேர்தல் பிரசார வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் கார்கே தலைமையில் இன்று மதியம் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், மாநில காங். தலைவர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தேர்தல் பிரசார கமிட்டி தலைவர் எம்பி பாட்டீல், எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இரு கட்சிகளும் சட்டப்பேரவை தேர்தலுக்கு போட்டி போட்டு பணிகளை தொடங்கி உள்ளதால், தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. 


Tags : Tripura ,Karnataka Assembly ,Elections ,Congress ,Baja Bhota Contest , Tripura, Karnataka Assembly Elections Congress, Baja Bhota Contest: Key Consultation with Leaders
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை