சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சியில் காட்சிப் பொருளான பேட்டரி வாகனங்கள்: பயன்பாட்டிற்கு வருவது எப்போது...

வாடிப்பட்டி: சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சியில் குப்பை வாங்குவதற்காக வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டிற்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சி உள்ளது. இங்கு 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில், குப்பைகளை வாங்குவதற்காக, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.பல லட்சம் மதிப்பில் 3 சக்கரமுடைய 20 வாகனங்கள் வாங்கப்பட்டன. ஒலிபெருக்கி வசதியுடன் கூடிய இந்த வாகனங்கள், பேரூராட்சி அலுவலகத்திற்கு பல மாதங்கள் முன்பு கொண்டுவரப்பட்டது.

ஆனால், பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்களில் உள்ள டயர்களில் காற்று போய் கிடக்கிறது. எனவே, பேட்டரி வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாகனங்களுக்கு தேவையான பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: