×

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 10,000 கனஅடி நீர் திறப்பு!

சென்னை: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 5,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் 60 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூண்டி நீர்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் இருந்து தற்போது 34.43 அடிக்கு தண்ணீர் உள்ளது.

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரி நிறைந்துள்ளது. பூண்டி நீர்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் இருந்து தற்போது 34.43 அடிக்கு தண்ணீர் உள்ளது. மேலும் இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 5,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியில் நீர் திறப்பு காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் 60 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Poondi Sathyamurthy Reservoir ,Kosasthalai River , 10,000 cubic feet water release from Poondi Sathyamurthy Reservoir to Kosasthalai River!
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...