×

தேசிய கட்சியானது டிஆர்எஸ்

திருமலை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்ற கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) என்ற பெயரை பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என மாற்ற தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், நேற்று தெலங்கானா பவனில் சந்திரசேகரராவ் முதலில் பிஆர்எஸ் கட்சி தொடக்க விழாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், டிஆர்எஸ் கட்சியை போன்றே ரோஜா நிற கொடியின் மத்தியில் தெலங்கானா மாநில வரைபடத்திற்கு பதில் இந்திய வரைபடத்துடன் கூடிய கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.

பிறகு சுபமுகூர்த்தத்தின்படி மதியம் 1.20 மணிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கேசிஆர் கையெழுத்திட்டார். இதன்மூலம் பாரத ராஷ்டிர சமிதி கட்சி உதயமாகியுள்ளது. சந்திரசேகரராவ் கையெழுத்திட்ட கடிதம் அதிகார பூர்வமாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டார். பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : TRS , The national party is TRS
× RELATED தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல்...