×

நாஞ்சில் பிரசாத் படத்திறப்பு நிகழ்ச்சி : ஈவிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி மரியாதை

ஆலந்தூர்: தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஆலந்தூர்  165வது வார்டு  மாமன்ற காங்கிரஸ் உறுப்பினருமான மறைந்த நாஞ்சில் பிரசாத்தின் திருஉருவப்பட திறப்பு விழா ஆதம்பாக்கம் நியூகாலனியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் எம்பி ஆர்.எஸ்.பாரதி, சந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு,  நாஞ்சில் பிரசாத் திருஉருவப்படத்திற்கு  மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

பின்னர்,  நாஞ்சில் பிரசாத் துணைவியார் சுதா பிரசாத்திற்கு ஆறுதல் கூறினர். இதுபோல் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர்கள் திரவியம் முத்தழகன், டில்லிபாபு ஏ.ஜி.சிதம்பரம், அடையாறு துரை மற்றும் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, இல.பாஸ்கர், எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பாலமுருகன், அம்பத்தூர் தெற்கு பகுதி தலைவர் ஆர்.டி.ரோமியோ, தளபதி பாஸ்கர், ஐயம்பெருமாள், எம்.ஜி.மோகன், தமிழ்ச்செல்வன், பன்னீர்செல்வம், தனசேகரன், எம்.பி.குணா,

ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், திமுக பகுதி செயலாளர் பி.குணாளன், மாமன்ற உறுப்பினர்கள் பூங்கொடி ஜெகதீஸ்வரன், துர்காதேவி நடராஜன், தேவி யேசுதாஸ், பிருந்தா ஸ்ரீமுரளிகிருஷ்ணன், பாரதி சாலமோன், செல்வேந்திரன், திமுக நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன், சீனிவாசன், கிரிஸ்டோபர், ரமேஷ், ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன், செயற்பொறியாளர் வளர்மதி, உதவி பொறியாளர் அலமேலு உட்பட பலர் கலந்துகொண்டு படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags : Prasad ,Nanju ,EVKS Ilangovan ,R. S.S. ,Bharati , Nanjil Prasad Launch Program : Courtesy of EVKS Elangovan, RS Bharati
× RELATED மார்த்தாண்டம் அருகே பைக் திருட்டு