×

தமிழகத்தில் வேலூர், தி.மலை. உள்பட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு:

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

நாளை 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்படி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசியில் நாளை கனமழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்; ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 12 முதல் 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு:

நாளை மறுநாள் முதல் டிசம்பர் 14ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

தரைக்காற்று எச்சரிக்கை:

இன்று வடதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பலத்த தரைக்காற்று 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வடதமிழ்நாடு, புதுச்சேரி, வங்கக்கடலின் தென்மேற்கு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று சூறாவளி வீச வாய்ப்பு இருக்கிறது. டிசம்பர் 12, 13ல் லட்சத்தீவு, கேரள  - கர்நாடக கடலோர பகுதிகள், அரபிக்கடலின் தென்கிழக்கு, மத்திய கிழக்கு பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும். டிசம்பர் 14ல் அரபிக்கடலின் தென்கிழக்கு, அதை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும். மணிக்கு 45 - 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


Tags : Vellore ,T.Malay ,Tamil Nadu ,Chennai Meteorological Center , Vellore, T. Malai., Very heavy rain, Weather Research Center
× RELATED வேலூர் சதுப்பேரி அருகே...