×

கமிஷனர் அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் மீது நடிகை ஜெயதேவி புகார்

சென்னை: ரூ.1 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.1.20 லட்சம் மோசடி ெசய்த சினிமா பைனான்சியர் ஒருவர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜெயதேவி புகார் அளித்துள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜெயதேவி(62) நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான், 45 ஆண்டுகளாக திரைத்துறையில் பரதநாட்டிய கலைஞராகவும்,41 திரைப்படங்கள் நடித்துள்ளேன். இதுதவிர ஜெயதேவி பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக 21 படங்கள் தயாரித்துள்ளேன். கடந்த 2005ம் ஆண்டு பாடகர் ஹரிகரன் நடித்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட முயற்சி செய்தேன். அதற்காக எனக்கு ரூ.30 லட்சம் பணம் தேவைப்பட்டது.

அப்போது எனக்கு அறிமுகமான சரவணன் என்பவர் மூலம் ரகு என்பவர் அறிமுகமானார். ரகு தான் கோவையில் ஒரு பிரபல பைனான்சியர் என்றும் ஆர்.கே.மூவிஸ் என்ற திரைப்பட நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார். எனக்கு குறைந்த வட்டியில் ரூ.1 கோடி கடன் வாங்கி தருவதாக உறுதியளித்தார். அதற்காக முதல் மாத வட்டி ரூ.1.20 லட்சத்தை முன்னதாகவே தரவேண்டும் என்று கூறினார். நான் ரூ.1.20 லட்சம் பணத்தை கடன் வாங்கி கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி கடன் வாங்கி தரவில்லை. இதனால் நான், கொடுத்த ரூ.1.20 லட்சம் வட்டிப்பணத்தை கேட்ட போது முறையான பதில் இல்லலை. எனவே சினிமா பைனான்சியர் ரகுவிடம் இருந்து ரூ.1.20 லட்சம் பணத்தை மீட்டு தர வேண்டும்.

Tags : Jayadevi , Actress Jayadevi complains against the cinema financier in the commissioner's office
× RELATED சாயல்குடியில் பெண் குழந்தைகள்...