பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமியின் தாயார் முதலாமாண்டு நினைவஞ்சலி: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்பு

திருவள்ளூர்: திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளருமான ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏவின் தாயார் ஆ.நாகபூஷணத்தின் முதலாமாண்டு நினைவஞ்சலி அம்பத்தூரில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று, நாகபூஷணத்தின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில் எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், ஜோசப் சாமுவேல், காரம்பாக்கம் க.கணபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், மாவட்ட துணை செயலாளர்கள் காயத்ரி தரன், டாக்டர் வி.சி.ஆர்.குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ் கு.விமல் வர்ஷன், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், டி.தேசிங்கு, ப.ச.கமலேஷ், ஜி.ஆர்.திருமலை, என்.இ.கே.மூர்த்தி, தி.வே.முனுசாமி, டி.முரளி, பொன்.விஜயன், பேபி சேகர், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பேரூராட்சி தலைவர் உ.வடிவேல், துணைத் தலைவர்கள் எம்.பர்கத்துல்லா கான், பரமேஸ்வரி கந்தன், தரன், ஜெ.மகாதேவன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: