×

தஞ்சை பெரியகோயில் நந்தி சிலையில் விரிசல்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் மிகப்பெரிய நந்தியம் பெருமான் சிலை அமைந்துள்ளது. மாதம்தோறும் இந்த மகா நந்தி சிலைக்கு பிரதோஷ வழிபாடு, அபிஷேகங்கள் நடக்கும். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் இந்த நந்தி சிலையின் பின்புறம் நேற்று திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் இதை பார்த்துஅதிர்ச்சியடைந்தனர்.

இதனை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். மிகவும் பிரசித்தி பெற்ற நந்தி மண்டபத்தின் மேற்புற சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் பழமை அடைந்துள்ளதால் அதனையும் சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thanjavur Temple , Cracks in the Nandi statue of Thanjavur Temple
× RELATED தஞ்சை அருகே தஞ்சபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா