நன்னிலம் பேரூராட்சியில் மாண்டஸ் புயல், மழை பாதிப்பை எதிர்கொள்ள மீட்பு உபகரணங்கள் தயார்

நன்னிலம் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக வங்கக்கடலில் உருவாகியுள்ள, மாண்டாஸ் புயல் கரையை கடக்கும் என்ற நிலையில், கனமழை எதிர்பார்த்து, நன்னிலம் பேரூராட்சி, நன்னிலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், நன்னில வட்டாரத்திற்கு உட்பட்ட 48 ஊராட்சிகள் உள்ளிட்ட இரண்டு பேரூராட்சிகளிலும், பேரிடர் தவிர்ப்பு, உள்ளூர் குழு அமைத்து, இடர்பாடுகளை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நன்னிலம் வட்டாட்சியர் தலைமையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒவ்வொரு கிராம ஊராட்சியாக, தேர்வு செய்யப்பட்டு முன் களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவரது அலைபேசி எண்ணை, தனி வாட்ஸ் அப் குழுவாக அமைத்து, பேரிடர் நிகழும், இடத்தின் தகவலை உடனே வருவாய்த் துறையின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மழைநீர் தேங்காதவாறு, உடன் அப்புறப்படுத்த கூடிய வகையில், பணிகள் மேற்கொள்ள, பணியாளர்களை தயார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை உடன் அப்புறப்படுத்தி, மாற்று இடத்தில் இருப்பதற்கான ஏற்பாடுகளை, செய்து வருகின்றனர். மேலும் மின்சாரத்துறை, மின்தடை ஏற்படாத வகையில், மின்கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரங்களை அப்புறப்படுத்தி, பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு துறை, ஊரக மருத்துவத்துறை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

நன்னிலம் வட்டாரத்தை சேர்ந்த, தன்னார்வ தொண்டு அமைப்புகளும், இடர்பாடுகள் ஏற்படும் நிலையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். நேற்று காலை முதலாக வானம் மேகமூட்டத்துடன் லேசான குளிர் காற்று வீசிய நிலையில், மாலை 4.30மணி அளவில் இருந்து லேசான தூறல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நள்ளிரவு முதல் கனமழை பெய்யும் என எதிர்பார்த்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கூடிய மழைநீர் உடன் வடியக்கூடிய வகையில், வடிகால் வாய்க்கால்களை மடைகளை திறந்து வைத்துள்ளனர். மேலும்பள்ளிகளுக்கு கனமழையின் காரணமாக விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நன்னிலம் வட்டாரத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

Related Stories: