×

மாண்டஸ் புயல் கரையை நெருங்கும் போது அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்..!

சென்னை: மாண்டஸ் புயல் கரையை நெருங்கும் போது அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு தீவிர புயலாக மாறியது. தீவிர புயலான மாண்டஸ் தற்போது புயலாக வலுவிழந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார். அப்போது; தென் மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல், புயலாக வலுவிழந்தது. மாண்டஸ் புயல் சென்னைக்கு தென் கிழக்கே 260 கி.மீ., காரைக்காலில் இருந்து வட கிழக்கே 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயலாக புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும். இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும். புயல் கரையை நெருங்கும் போது அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். மாண்டஸ் புயல் நாளை முற்பகல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறையும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுகுறையும் இவ்வாறு கூறினார்.


Tags : Cyclone Mantus ,Chennai Meteorological Center , Cyclone Mantus has a maximum speed of 100 km/h as it approaches the coast. Wind will blow at speed: Chennai Meteorological Center informs..!
× RELATED தமிழ்நாட்டில் கோடை மழை 69% குறைவாக...