×

நாளுக்கு நாள் மாசு அதிகரித்து வருகிறது சமையலறை தோட்டங்கள் மூலம் பசுமையை அதிகரிக்க வேண்டும்-திருப்பதி நிகழ்ச்சியில் ஜனாதிபதி முர்மு பேச்சு

திருமலை :  நாளுக்கு நாள் மாசு அதிகரித்து வருகிறது, எனவே சமையலறை தோட்டங்கள் மூலம் பசுமையை அதிகரிக்க வேண்டும் என்று திருப்பதியில் நடந்த மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.ஆந்திராவில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருப்பதி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று திருப்பதி பத்மாவதி மகிளா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:

வாழ்க்கையில் எப்போதும் உனக்காக மட்டும் வாழாதே. மிருகங்களும் அப்படித்தான் வாழ்கின்றன. நமக்காக வாழ்ந்தால் அது என்ன வாழ்க்கை.  பிறருக்காக வாழ்ந்தால் தான் வாழ்க்கை சரியாக இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியடையுங்கள். திரும்பி பாருங்கள். பின்தங்கியவர்கள் ஏன் அப்படியே உள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  அவர்களை முன்னோக்கி கொண்டு வர செயல்படுங்கள்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், பொறியாளர்கள் போன்றவைக்கு பின் தங்கிய கிராமங்களை தத்தெடுத்து ஓரிரு இரவுகள் அங்கேயே தங்கி பெண்கள், குழந்தைகள், ஆண்களிடம் பேசி அரசின் திட்டங்கள் சென்றடைகிறதா?  இல்லையா? என  தெரிந்து கொள்ள வேண்டும்.  நாட்டின் வளர்ச்சிக்கு வேறு என்ன திட்டங்கள் தேவை?  குழந்தைகளுக்கான திட்டங்கள் சரியானதா?  மாற்றங்களை செய்ய வேண்டுமா?  என்பதை அறிந்து கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்.

நாளுக்கு நாள் மாசு அதிகரித்து வருகிறது. எனவே, சமையலறை தோட்டங்கள் மூலம் பசுமையை அதிகரிக்க வேண்டும்.  ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான தைரியமும் வாய்ப்புகளும் வழங்க வேண்டும்.   கல்வி அறிவு குறைவாக இருப்பதாக நினைக்க கூடாது. அனைத்திற்கும் கல்வி முக்கியமல்ல. கிராமங்களில் நாட்டு மருந்து தயாரிக்கும் மக்கள் எம்பிபிஎஸ் படிக்காவிட்டாலும்  அவர்களின் மருத்துவத்தில் தரம் அதிகம்.  கடந்த காலங்களில் பெண்கள் வங்கிகள் மற்றும் கலெக்டர் அலுவலகங்களுக்கு செல்லக்கூட பயந்தனர்.

ஆனால், தற்போது சுய உதவிக்குழுக்களாக இணைந்து பயணம் செய்வது அவர்களுக்கு தைரியம் அளித்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்தப்பட்ட மலர்களை கொண்டு மகளிர் குழுவினர் தயார் செய்த  போட்டோக்கள் மற்றும் பல்வேறு பொருட்களை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

Tags : President ,Murmu ,Tirupati , Tirumala: Pollution is increasing day by day, so greenery should be increased through kitchen gardens in Tirupati
× RELATED 133வது பிறந்த நாள் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை