×

133வது பிறந்த நாள் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்திய அரசியலமைப்பின் சிற்பி பி.ஆர்.அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

குடியரசு தலைவர் முர்மு வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “இந்திய அரசியலமைப்பின் சிற்பியும், தேசத்தை கட்டியெழுப்பிய தலைவர்களில் ஒருவருமான அம்பேத்கரின் பிறந்தநாளில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

The post 133வது பிறந்த நாள் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,New Delhi ,President ,Murmu ,Modi ,BR ,Drabupati Murmu ,
× RELATED அமஇ மாநில தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்