×

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல் நடமாட்டம்: டிச.15 - 16-ல் இந்திய அக்னி-V ஏவுகணை சோதனை நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பு..!

டெல்லி : இந்தியா இம்மாத மத்தியில் நீண்ட தூரம் சென்று தாக்கவல்ல அக்னி-V ஏவுகணை சோதனை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் சீனா உளவு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து சீனா உளவு கப்பல் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

சீனாவின் உளவு கப்பலான யுவன் வாங்-5 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் அம்மன் தோட்ட துறைமுகத்தில் நெஞ்சுரமிட்டு இருந்தது. இந்தியாவை உளவு பார்க்கும் விதமாக சீன கப்பல் நிறுத்தப்பட்டு இருப்பதாக இந்திய அரசு இலங்கைக்கு கடும் அடிசேப்பம் தெரிவித்திருந்தது. சில நாட்கள் இலங்கையில் முகாமிட்டிருந்த யுவன் வாங்-5 உளவு கப்பல் பின்னர் சீனா திரும்பிவிட்டது.

இந்நிலையில், டிசம்பர் 15 அல்லது 16-ம் தேதி நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் உடைய அக்னி-V போலாஸ்டிக் ஏவுகணையை சோதனையிட இந்தியா திட்டமிட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கடற்கரை பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து ஏவுகணை சோதனை நடைபெற உள்ளதாக சமீபத்தில் இந்திய அரசு முறைப்படி நோட்டாம் எனப்படும் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவின் உளவு கப்பலான யுவன் வாங்-5 இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளது. திங்களன்று இந்தோனேசியாவின் லம்பாக் ஜலசந்தியின் வழியாக இந்திய பெருங்கடல் பகுதிக்குள் சீனா உளவு கப்பல் நுழைந்துள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவிக்கின்றன. இந்தியா ஏவுகணை சோதிக்க திட்டமிட்டுள்ள தருணத்தில் சீனா உளவு கப்பல் யுவன் வாங்-5 இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளதால் அதன் நடமாட்டத்தை இந்திய ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.      


Tags : Indian Ocean ,India , இந்திய, பெருங்கடல், சீன, உளவு, கப்பல், அக்னி-வி, ஏவுகணை, பரபரப்பு
× RELATED “சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்