×

தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியல் பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேசிய மாநாட்டு கட்சி தலைவராக இருந்த பரூக் அப்துல்லா(85) உடல் நலக்குறைவு காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். புதிய தலைவரை தேர்வு செய்ய தேசியமாநாடு கட்சியின் பிரதிநிதிகள் கூட்டம் ஸ்ரீநகர் நசீம் பாக்கில் நேற்று நடைபெற்றது. இதில், பரூக் அப்துல்லா சார்பில் மட்டும் 604 மனுக்ககளை கட்சியினர் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, கூட்டத்தில் கட்சியின் தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு  செய்யப்பட்டார்.

Tags : Farooq Abdullah ,National Conference Party ,President , Farooq Abdullah re-elected as National Conference Party President
× RELATED தோல்வியை தழுவிய பரூக் அப்துல்லா, மெகபூபா