×

ஒற்றுமை யாத்திரை சரித்திர வெற்றி பெறும் சச்சின் பைலட் தகவல்

புதுடெல்லி: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது.கட்சி ேமலிடம் தலையிட்டு இருவருக்கு இடையே சமரசம் செய்து வைத்துள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி எம்பி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் நேற்று மாலை ராஜஸ்தானில் உள்ள ஜலாவாரில் நுழைந்தது.

இந்நிலையில், சச்சின் பைலட் நேற்று காலை கூறும்போது,‘‘  ராஜஸ்தானில் ஒற்றுமை யாத்திரை வெற்றி அடைவதற்கு தீவிரமாக உழைத்து வருகிறோம். அதை விட அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைப்பதே முக்கிய குறிக்கோள்.ராஜஸ்தானில் ஒவ்வொரு 5 ஆண்டும் ஆட்சி மாறும்.அந்த நடைமுறையை மாற்ற காங்கிரசார் ஒற்றுமையுடன் வேலை செய்கின்றனர். ஒற்றுமை யாத்திரை மாநிலத்தில் சரித்திர வெற்றி அடையும்’’ என்றார்.

Tags : Sachin Pilot ,Unity Pilgrimage , Unity Pilgrimage, Historic Victory, Sachin Pilot Info
× RELATED மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப்...