×

கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி ஓபிஎஸ், இபிஎஸ் சுயநலவாதிகள் அதிமுகவைவிட்டு விலகுகிறேன்

கோவை: ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு சுயநலவாதிகளுடன் இருக்க விரும்பவில்லை. அதிமுகவைவிட்டு விலகுகிறேன் என கோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் பரபரப்பாக பேட்டி அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் நல்ல நேர்மையான மனிதர் என நினைத்து நான் அதிமுகவுக்கு கடுமையாக உழைத்தேன். அவருக்காக விசுவாசமாக பணியாற்றி வந்தேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து எனது மனசாட்சிபடி பேட்டி அளித்தேன். ஜெயலலிதாவின் உயிரைவிட முதல்வர் பதவிதான் முக்கியம் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவருமே நான்கரை ஆண்டு காலம் செயல்பட்டு விட்டனர்.

ஜெயலலிதாவுக்காக நான் இந்த இயக்கத்தில் பணியாற்றி வந்தேன். ஜெயலிதாவை உயிருக்கு உயிராக நேசித்தவன். அப்படி இருக்கையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரது செயல்பாடுகளை பார்க்கும்போது, இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக சண்டைபோடுகிற இவர்களுடன் சேர்ந்துகொண்டு நாமும் கட்சியை அழிக்கிற முயற்சியில் ஈடுபடக்கூடாது என முடிவுஎடுத்து, இன்று முதல் இவர்களிடமிருந்து விலகுகிறேன். ஆனால், நான் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன்.

திராவிட பாரம்பரியம் எனது உடலில் ஓடுகிற ரத்தம் ஆகும். விரைவில் நல்ல முடிவு எடுப்பேன். ஒரு நாளும் அரசியலைவிட்டு விலகமாட்டேன். துரோகிகளோடு சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்பது உறுதி. அதிமுகவில் இருந்து என்னை நானே விலக்கிக்கொள்கிறேன். ஜெயலலிதாவைவிட பதவிதான் முக்கியம் என நினைத்து, இவர்கள் சுயநலத்துடன் பதவி சுகத்தை அனுபவித்து உள்ளார்கள். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து, அவரை உயிரோடு அழைத்து வர இவர்களால முடியவில்லை. இந்த செயலை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப்போன்று லட்சக்கணக்கான தொண்டர்கள் மனக்குமுறலுடன் இருக்கிறார்கள். அப்பல்லோ மருத்துவமனையில் முறையாக சிசிச்சை அளிக்கவில்லை. அந்த நேரத்தில் பதவியில் இருந்த இவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை. இதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு கோவை செல்வராஜ் கூறினார்.

கோவை செல்வராஜ் அதிரடி நீக்கம்: இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக பேட்டி அளிப்பதுடன், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ளதாகவும், எனவே, கோவை செல்வராஜ் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் எனவும் நேற்று அதிரடியாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன், கோவை மாவட்டத்தை நான்காக பிரித்து, நான்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டார்.
அதன்படி கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு மற்றும் கோவை புறநகர் தெற்கு என கட்சி ரீதியாக செயல்பட்டு வந்த மூன்று மாவட்டங்கள், நிர்வாக வசதியையொட்டி, கோவை மாநகர், கோவை மாநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு மற்றும் கோவை புறநகர் வடக்கு என நான்கு மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக டி.மோகன் நியமிக்கப்படுகிறார். இவர், கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளை கவனிப்பார். கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளராக சுப்ரீம் எல்.இளங்கோ நியமிக்கப்படுகிறார். இவர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை கவனிப்பார். கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக குறிச்சி எம்.மணிமாறன் நியமிக்கப்படுகிறார். இவர், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை கவனிப்பார்.

கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக வக்கீல் சூலூர் பி.ராஜேந்திரன் நியமிக்கப்படுகிறார். இவர், கோவை வடக்கு, சூலூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளை கவனிப்பார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார். திராவிட பாரம்பரியம் எனது உடலில் ஓடுகிற ரத்தம் ஆகும். விரைவில் நல்ல முடிவு எடுப்பேன். ஒரு நாளும் அரசியலைவிட்டு விலகமாட்டேன். துரோகிகளோடு சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்பது உறுதி. அதிமுகவில் இருந்து என்னை நானே விலக்கிக்கொள்கிறேன்.


Tags : Gov Selvaraj , Coimbatore Selvaraj sensational interview OPS, EPS selfish people I quit AIADMK
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும்...