நடிகை கீர்த்தி சுரேஷ் போல் நடித்து ரூ.41 லட்சம் பறிப்பு: பலே பெண் சிக்கினார்

பெங்களூரு: நடிகை கீர்த்தி சுரேஷை காதலிப்பதாக நம்பி சமூக வலைதளம் மூலமாக  ரூ.41 லட்சம் பணத்தை இழந்து இளைஞர் கொடுத்த புகாரின் பெயரில் மஞ்சுளா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், சிந்தகி நகரை சேர்ந்த பரமேஸ்வர் ஹிப்பர்கி. இவர் ஐதராபாத்தில் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். திடீரென ஒரு நாள் நடிகை கீர்த்தி சுரேஷ் பெயரில் உள்ள சமூக வலைதள பக்கத்தில் இருந்து இவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த பரமேஸ்வர் தொடர்ந்து கீர்த்தி சுரேஷிடம் பேசுவதாக நினைத்து நிர்வாண படங்களை பகிர்த்துள்ளார். அந்த படங்களை இணைய தளங்களில் வெளியிடப்போவதாக அவருக்கு ஒரு பெண் மிரட்டல் விடுத்தார். அப்போதுதான், இதுவரை கீர்த்தி சுரேஷ் என்று நம்பி பேசியது ஒரு மோசடி பெண்ணிடம் என்பதை பரமேஸ்வர் ஹிப்பர்கி உணர்ந்தார். இண்டர்நெட்டில் மானம் போகாமல் இருக்க ரூ.41 லட்சம் வரை அந்த பெண்ணுக்கு அவர் கொடுத்துள்ளார். அதன் பிறகும் அந்த மோசடி பெண் பணம் கேட்டதால், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டான தாலுகா, தாசர ஹள்ளி என்ற கிராமத்தில் வசித்து வரும் மஞ்சுளா என்ற பெண்ணை கைது செய்தனர். போலீசார், மஞ்சுளாவிடம் நடத்திய விசாரணையில் பரமேஸ்வர் மூலமாக பெற்ற பணத்தில் 100 கிராம் தங்க நகைகள், ஹூண்டாய் கார், இருசக்கர வாகனம் என பல சொகுசுப் பொருட்களை வாங்கி குவித்துள்ளதை கண்டுபிடித்தனர். மேலும் அடுக்குமாடி வீட்டை மஞ்சுளா கட்டி வருவதையும்  போலீசார் கண்டுபிடித்தனர்.

Related Stories: