×

மாற்றுத்திறனாளிகள் தினம்; திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை வழங்கிய முதல்வருக்கு நன்றி: மாநிலத் தலைவர் ரெ.தங்கம் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு மாற்று திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை:
அனைத்து நாடுகள் மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கலைஞர், ஊனம் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டி, தனித்துறை தந்து மகுடம் சூட்டி பாதுகாவலராக திகழ்ந்து பல்வேறு திட்டத்தை அறிவித்து செயலாக்கம் செய்தார்.

அதே போல, அவரது வழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தார். பராமரிப்பு உதவி தொகை ரூ.2000 வழங்குதல், இலவச வீட்டு மனை பட்டா, சாலை ஓரங்களில் வியாபாரம் செய்ய அனுமதி, ரொக்கமாக திருமண உதவி தொகை, மெரினா கடற்கரை தண்ணீரில் கால் பதித்திட ரூ.1 கோடி செலவில் சிறப்பு பாதை, 10 ஆண்டு காலம்  செயல்படாத நல வாரியத்திற்கு மீண்டும் உயிரோட்டம் வழங்கி நல வாரியம் மறு சீரமைப்பு செய்தல் உள்பட பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க  சாதனை திட்டத்தை மாற்று திறனாளிகளுக்கு வழங்கியுள்ளார்.

அவரை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பாக வணங்கி மகிழ்கின்றேன். இந்நாளில் மாற்றுத்திறனாளிகள் சமூகம் எல்லா வளமும் பெற்று அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று மாலை சங்கம் சார்பாக  நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

Tags : Chief Minister ,DMK ,State President ,Rev. ,Thangam , Day of Persons with Disabilities, DMK Government, Thank you to the Chief Minister, Statement by State President Rev. Thangam
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...