சந்திரமுகி 2ல் ஜோதிகா கேரக்டரில் கங்கனா ரனவத்

மும்பை: கடந்த 2015 ஏப்ரல் 14ம் தேதி ரிலீசான படம், ‘சந்திரமுகி’. பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு நடித்துஇருந்தனர். வித்யாசாகர் இசை அமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க கடந்த சில ஆண்டுகளாக பி.வாசு முயற்சித்து வந்தார். இந்நிலையில், 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இப்படம் உருவாகி வருகிறது. முக்கிய கேரக்டரில் வடிவேலு நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. மரகதமணி என்கிற எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். பி.வாசு எழுதி இயக்குகிறார். மைசூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தில் சந்திரமுகி மற்றும் கங்காவாக நடித்திருந்த ஜோதிகா கேரக்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ‘சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகா கேரக்டரில் பாலிவுட் நடிகையும், இயக்குனரும், தயாரிப்பாளருமான கங்கனா ரனவத் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் மற்றும் சமூகரீதியாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வரும் கங்கனா ரனவத், ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிப்பது குறித்து மும்பை ஊடகங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories: