தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் வியக்க தக்க அளவில் வளர்ச்சியடைந்த நன்னிலம் தாலுகா: ரூ.3 கோடியில் பேருந்து நிலையம் விரிவாக்கம்

நன்னிலம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதி விவசாயம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சார்ந்த பகுதியாகும். இங்கு முதன்மையான தொழில் என்பது விவசாய மட்டுமே. இந்நிலையில் நன்னிலம் பகுதியில் தாலுகா அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், பொதுப்பணித்துறை நிர்வளஆதாரம் அலுவலகம், பொதுப்பணித்துறை கட்டுமான பணிகள் அலுவலகம், சார்நிலை கருவூலம் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை பிரிவு அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலகம், நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், இயங்கி வருகின்றன. மேலும் காவல்துறை குடியிருப்பு வளாகம், அமையப்பெற்றுள்ளது.

நன்னிலம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்படக்கூடிய வகையில், அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவைகள் எல்லாம் பழைய கட்டிடங்களில் இயங்கி வந்த நிலையில், தற்போது புதிய, கட்டுமான பணிகள் நடைபெற்று, சிறந்த உள் கட்டமைப்பு வசதிகளோடு, செயல்பட்டு வருகிறது. நன்னிலம் காவலர் குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றப்பட்டது, டிஎஸ்பி அலுவலக கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளும் உள்ளடக்கியதாக, நவீனப்படுத்தப்பட்ட அவசரகால பிரிவு உடன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

நீதிமன்ற வளாகம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் என ஒருங்கிணைந்த நீதிமன்றமாக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடத்தில் அடுக்குமாடி கட்டிடமாக கட்டப்பட்டு, அனைத்து வசதிகளோடு இயங்கி வருகிறது. தற்போது நன்னிலம் பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான கட்டுமான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நன்னிலம் பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையம் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்டு தமிழக முதலமைச்சரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகம் முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நன்னிலம் தீயணைப்பு நிலையம், வருவாய் ஆய்வாளர்கள் குடியிருப்பு மற்றும் அலுவலகம். கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம், புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகம், என்ன நன்னிலம் தாலுகா, வளர்ச்சிப்பாதையை நோக்கி, புதிய உள் கட்டமைப்பு வசதிகளோடு, கிராமப்புற பகுதியாக இருந்தாலும், நகர்புறத்திற்கு இணையான வளர்ச்சி நோக்கி, சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசின், தொலைநோக்கு பார்வை திட்டத்தின் கீழ், உள்கட்ட வசதிகளை மேம்படுத்தி, மக்களின் தேவைகள் எளிதாக மக்களை சென்றடையும் வகையில், அரசு நிர்வாகம், செயல்படும் நோக்கில் நிர்வாக செயல்பாட்டிற்கு, உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், கிராமப்புற பகுதிகள் நிறைந்த நன்னிலம் தாலுகா, நகர்ப்புறங்களுக்கு இணையான வளர்ச்சி நோக்கி, சென்று கொண்டிருக்கிறது.

நவீன கட்டிட, கட்டுமானங்களின் தாக்கம், பொதுமக்களும் தங்களினுடைய இல்லங்களை நவீன கட்டுமான பணிகளுக்கு கொண்டு செல்லும் நிலையை உருவாக்கியுள்ளது. ஓட்டு கட்டிடங்களும் கூரை கட்டிடங்களும் நிறைந்த நன்னிலம் பகுதி, இப்போது கட்டுமான பணிகளின் தொடர்ந்து நடைபெறக்கூடிய பகுதியாக மாறி வருகிறது, பழைய முகம் மாறி புது அடையாளங்களுடன் நன்னிலம் தாலுகா வளர்ச்சி பாதையில் அடி எடுத்து வைத்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகள், நகர்ப்புற விரிவாக்கம், சாலை வசதிகள் மேம்பாடு, புதிய தொழில்நுட்பத்தோடு விவசாயம், என நன்னிலம் பகுதி செயல்பட்டாலும். படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு உள்ளூரிலே ஏற்படும் வகையில், விவசாயம் சார்ந்த

தொழிற்சாலைகள் அமையப்பெற்றால், நன்னிலம் பகுதி புதிய வளர்ச்சிக்கான முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்க, வாய்ப்பாக அமையும். தமிழக அரசு ஒவ்வொரு திட்டத்திலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், செயல்பட்டு வரும் நிலையில், நன்னிலம் பகுதிக்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்கும் என்கின்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே உள்ளது.

தமிழக அரசின் சமூக நீதிக் கொள்கை, சீரான பரவலான வளர்ச்சி, நோக்கில் திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது நன்னிலம் தாலுகா சிறப்பான வளர்ச்சியில் உள்கட்ட அமைப்பு வசதியில் தன்னிறைவு பெற தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நன்னிலம் தாலுகா, தமிழக அரசின் தன்னிறைவு மாநிலம் என்ற நோக்கில், திட்டங்கள் வகுத்து வரும் நிலையில், அரசு கட்டுமான பணிகள், வியக்கத் தகுந்த அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

Related Stories: