குமரி முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், மழை ஓய்ந்து மீண்டும் வெயில் கொளுத்திவந்தது. இந்நிலையில் மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. திருவட்டார், குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலையும் மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கன மழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலை வரை அதிகபட்சமாக கன்னிமாரில் 117 மி.மீ மழை பெய்திருந்தது. மலையோர பகுதியில் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. பெருஞ்சாணி அணை மூடப்பட்டிருந்தது.

Related Stories: