×

ரஜினிமுருகன் 2ம் பாகம் உருவாகிறது; இயக்குனர் தகவல்

சென்னை: பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீ திவ்யா, பிந்து மாதவி, சூரி நடிப்பில் வெளியான படம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இதை தொடர்ந்து மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், சூரி நடிப்பில் ரிலீசான படம், ‘ரஜினிமுருகன்’. மேலும், 3வது முறையாக சிவகார்த்திகேயன், பொன்ராம் இணைந்து பணியாற்றிய படம், ‘சீமராஜா’. இந்நிலையில், ‘ரஜினிமுருகன்’ படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகும் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து பொன்ராம் அளித்துள்ள பேட்டி வருமாறு:

நான் இயக்கிய ‘ரஜினிமுருகன்’ படத்தின் கிளைமாக்சில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் போஸ் பாண்டி கேரக்டர் இடம்பெறும். அதுபோல், ‘ரஜினிமுருகன்’ 2ம் பாகத்தில் 2 சிவகார்த்திகேயன், 2 சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரை மையப்படுத்தி கதை எழுதியுள்ளேன். இதை சிவகார்த்திகேயனிடம் சொன்னேன். இந்தக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொன்னார். தகுந்த சந்தர்ப்பம் அமையும்போது ‘ரஜினிமுருகன்’ 2ம் பாகத்தில் மீண்டும் நாங்கள் இணைவோம். ஆனால், எப்போது என்று ெதரியவில்லை.



Tags : Rajinimurugan , Rajinimurugan 2nd part in development; Director Information
× RELATED ரஜினிமுருகன் 2ம் பாகம் உருவாகிறது; இயக்குனர் தகவல்