திருவொற்றியூர் பகுதியில் மெய்நிகர் நூலகம் திறப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மெய்நிகர் நூலகத்தை வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார். திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே மாவட்ட கிளை நிர்வாகம் உள்ளது. இங்கு மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்ற பல்வேறு துறை சார்ந்த மாணவ, மாணவிகள், பட்டதாரிகள், தொழிலாளர்கள், கவிஞர்கள் போன்றவர்களுக்கு பயன்படும் வகையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தலைப்பில் நூல்கள் உள்ளன. தற்போது, நவீன தொழில்நுட்ப வசதியில் ஒரு இடத்திற்கு நாம் போகாமலே அந்த இடத்தை 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் மெய்நிகர் என்ற 2 விசேஷ கருவிகளை திருவொற்றியூர் கிளை நூலகத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்த, விசேஷ மெய்நிகர் கருவி பயன்படுத்தப்படும் நூலகம் தொடக்க விழா நேற்று கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமையில் நூலக வளாகத்தில் நடைபெற்றது. வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, விஷே கருவிகளை மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ஜி.வரதராஜன், என்.துரைராஜ், சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் கலைவாணன், நூலகர் பேனிக் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் நல சங்கம் சார்பில், நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுகளை கலாநிதிவீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆகியோரிடம் வழங்கினர்.

Related Stories: