ஆஸ்திரேலிய பெண் கொலையில் தேடப்பட்ட நபர் டெல்லியில் கைது

டெல்லி: ஆஸ்திரேலிய நாட்டால் ரூ.5.5 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நபர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய பெண் கொலையில் தேடப்பட்டவர் ஆவார். பஞ்சாப்பை சேர்ந்தவர் 38 வயதான ராஜ்விந்தர் சிங்.

இவர் ஆஸ்திரேலியாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு குயின்ஸ்லாந்தில் 24 வயது டோயாகார்டிங்லி என்ற இளம் பெண்ணை கொலை செய்ததாக புகார் எழுந்தது. 2018ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி குயின்ஸ்லாந்தின் வோங்கெட்டி கடற்கரையில் டோயாகார்டிங்லி தனது நாயுடன் வாக்கிங் சென்றபோது மாயமானார்.

மறுநாள் அவரது சடலம் கடலில் கண்டெடுக்கப்பட்டது. அது தொடர்பாக குயின்ஸ்லாந்து போலீசார் வழக்கு பதிவு செய்த் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மருந்தாக பணியாளரான டோயாகார்டிங்லியை கொன்றது ராஜ்விந்தர் சிங் என்பவர் உறுதியானது. ஆனால் கொலை நடந்த 2வது நாளில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா தப்பி வந்தது தெரியவந்தது.

தனது மனைவி மற்றும் குழந்தைகளை ஆஸ்திரேலியாவில் இந்தியா தப்பி வந்த அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பர் தெரியாமல் இருந்தது. எனவே ராஜ்விந்தர் தலைக்கு குயின்ஸ்லாந்து போலீசார் 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை பரிசாக அறிவித்தது. இந்திய மதிப்பில் ரூ.5.5 கோடி ஆகும். ஆஸ்திரேலிய அரசு இதுவரை அறிவித்த பரிசுத்தொகையில் இதுவே மிக அதிகம் என கூறப்பட்டது.

இந்தியாவில் ராஜ்விந்தரை நாடு கடத்தும்படி இந்திய அரசை ஆஸ்திரேலியா கடந்த மார்ச் மாதம் வலியுறுத்தியது. அதற்கு இந்திய அரசு இந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் ராஜ்விந்தரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். எனவே ஆஸ்திரேலியா அறிவித்த ரூ.5.5 கோடி பரிசுத்தொகை டெல்லி போலீசுக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: