×

தட்டம்மை, ருபெல்லா வைரசை தடுக்க குழந்தைகளுக்கு கூடுதல் டோஸ்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு மட்டும் 4 கோடி குழந்தைகள் தட்டம்மைக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை’ என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவில் பீகார், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட் , மகாராஷ்டிராவில் தட்டம்மை, ருபெல்லாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது.  

இது குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார துறை இணை செயலாளர் அசோக் பாபு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ‘நோய் அதிகம் உள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை என்பது உறுதியாகிறது.  தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. எனவே, 9 மாத முதல் 5 வயது  குழந்தைகளுக்கு கூடுதல் ஒரு டோஸ் தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி செலுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Union govt , Measles, rubella virus, extra dose for children, Union Govt
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...