விக்கிரவாண்டி அருகே பனையபுரம் சிவன் கோயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பனையபுரம் சிவன் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மற்றும் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்திவருகின்றனர்.

அதன்படி செஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்று முன்திம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயிலில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, முருகன், ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ராமவெங்கடேசன், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் தமிழ் உதவியுடன் சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: