×

581 கிலோ கஞ்சா மிஸ்ஸிங்.. போலீசார் விளக்கத்தால் அதிர்ச்சி அடைந்த நீதிமன்றம்..!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக மதுரா போலீஸ்சார் மீது குற்றம்சாட்டியுள்ளனர். 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளது. கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், குற்றத்தை நிரூபணம் செய்து தண்டனையை அறிவிக்க பறிமுதல் செய்த கஞ்சாவை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதைத் தொடர்ந்து கஞ்சாவின் மாதிரிகளை நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பித்தனர். அனால் நீதிமன்றம் பறிமுதல் செய்த மொத்த கஞ்சாவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இது குறித்து மதுரா போலீசார் நீதிமன்றத்தில் அளித்த பதிலில்; மதுரா காவல்நிலைய ஸ்டோர் ரூம்மில் எலித்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிக்கள் கிலோக்கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் சாப்பிட்டு விட்டதாகவும், எனவே 581 கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் பதில் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனை வேறொருவரிடத்தில் அதிக விலைக்கு விற்று விட்டு எலிகளின் மீது பழிசுமத்தியதில் விசாரணையில் அம்பலமாகியது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : 581 kg ganja missing.. Court shocked by police explanation..!
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...