×

டியூப் லைட், ஹாலோஜன் விளக்குகளுக்கு மாற்றாக சிவகாசியில் ரூ.5.40 கோடி மதிப்பில் எல்இடி லைட்கள்

* ரூ.50 லட்சம் வரை மின்கட்டணம் மிச்சம்
* இனி தெருக்கள் பிரகாசிக்கும்

சிவகாசி:  சிவகாசி மாநகராட்சியில் உள்ள 4440 மின் கம்பங்களில் உள்ள டியூப் லைட், ஹாலோஜன் தெரு விளக்குகளை அகற்றி விட்டு ரூ.5.40 கோடி மதிப்பில் எல்இடி லைட்டுகள் பொறுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளதாக மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்துள்ளார். சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைத்து சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.  திருத்தங்கல், சிவகாசியில் தலா 24 வார்டுகள் என மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் சொத்து வரி வசூல் மறு சீரமைப்பு பணியால் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்ேபாது இந்த பணிகள் முடிவடைந்து வரிவசூல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருத்தங்கல் பறையங்குளம் கண்மாய் சீரமைப்பிற்காக ரூ.1.40, முத்தாலம்மன் குளத்தை சீரமைக்க ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர நமக்கு நாமே திட்டத்தில் ரூ.1.42 கோடி மதிப்பில் அடிப்படை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு ெசய்யப்பட்டுள்ளது. இதே போன்று சிவகாசி பொத்துமரத்து ஊருணி ரூ.2 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. சிவகாசி பஸ்நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பில் வணிக வளாகம், ரூ.10 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள 4440 மின் கம்பங்களில் டியுப் லைட் மற்றும் ஹாலோஜன் தெருவிளக்குகள் ெபாருத்த பட்டுள்ளது.

இந்த லைட்டுகளால் மாநகராட்சிக்கு அதிக மின்கட்டண செலவு ஆகிறது. தெருவிளக்குளில் எல்இடி லைட்டுகள் பொருத்த பட்டால் மின் கட்டண செலவு குறையும் என்பதால் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மின் கம்ங்களிலும் எல்இடி லைட்டுகள் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மாநகராட்சி  தெருவிளக்குகளில் டியூப் லைட்டும் குறுக்கு தெருக்கள் மற்றும் சிறிய தெருக்களில் ஹாலோஜன் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், பிரதான சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மட்டும் எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளுக்கு மட்டும் மாதம் தோறும் ரூ.25 முதல் 30 லட்சம் வரை மின் கட்டணமாக செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில் தமிழக அரசு அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பயன்படுத்தப்படும் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்ற அறிவுறுத்தியது. அதன்படி சிவகாசி மாநகராட்சியில் உள்ள 4,440 தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகள் பொருத்த ரூ. 5.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹாலோஜன் விளக்கு உள்ள இடங்களில் 15 வாட்ஸ் விளக்குகளும், டியூப் லைட் உள்ள இடங்களில் 30 வாட்ஸ் எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட உள்ளது. இதற்காக  டெண்டர் விடப்பட்டு எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது எல்இடி லைட் ெபாருத்தும் பணிக்காக ரூ.5.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பட்டுள்ளது.

இந்த நிதியில் அனைத்து மின்கம்பங்களிலும் எல்இடி விளக்குகள் பொருத்தபடவுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி மின் கட்டண செலவு குறையக்கூடும். இது குறித்து மேயர் சங்கீதாஇன்பம் கூறுகையில், ‘‘தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில் தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகள் பொறுத்தப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.5.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது மாநகராட்சி பகுதியில் உள்ள தெரு விளக்குகளால் மாதம் ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வரை மின் கட்டணம் செலுத்த பட்டு வருகிறது. அனைத்து தெரு விளக்குகளையும் எல்இடி விளக்குகளாக மாற்றுவதன் மூலம் மின்சார பயன்பாடு குறைவதுடன் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை மின் கட்டண செலவு  குறையும். இந்த நிதியில் மாநகராட்சியில் பிற அடிப்படை பணிகளை மேற்கொள்ள முடியும் ’’ என்றார்.

Tags : Sivakasi , LED lights at a cost of Rs. 5.40 crore in Sivakasi to replace tube light, halogen lights
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து