×

சென்னையில் பாமாயில் பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: சென்னையில் பாமாயில் பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு செய்ததில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது .   இந்த புகாரியின் அடிப்படையில் வருமான வரித்துறையில் சோதனை நடத்தி வருகின்றனர். பொது விநியோகத் திட்டத்திற்கு சப்ளை செய்யும் இரண்டு குழுமங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.  

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட நிறுவனங்களில் உருவான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர் .  வரிஏய்ப்பு குறித்து புகார் எழுந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கு எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை சில நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் முறையாக வரியை செலுத்தாமல் வரிஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்திருக்கிறது.

இதன் பின்னர் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களின் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கி வரும் காமாட்சி அண்ட் கோ நிறுவனத்தில் சோதனை நடந்து வருகிறது.  இந்த நிறுவனம் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, உலர் திராட்சை, முந்திரி, பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை விநியோகம் செய்து வருகிறது. உணவுப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி மொத்த விநியோகமும் செய்து வருகிறது. சென்னை மண்ணடி தப்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலா இன்பாக்ஸ் என்கிற நிறுவனம் பருப்பு,  எண்ணைப் பொருட்கள் உட்பட உணவு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்கிறது.

அதேபோல் தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்டால் மில்,  சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டர்க்ரேட்டடு சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் உட்பட மொத்தம் ஐந்து நிறுவனங்களுக்கு தொடர்புடைய  இடங்கள்,  உரிமையாளர்கள் வீடுகள், பொருட்கள் வைத்திருக்கும் கிடங்குகள் , அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடந்து வந்தது. சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், மதுரை, கோவை என்று தமிழகம் முழுவதும் இந்த நிறுவனங்களுக்கு தொடர்பான அலுவலகங்களில் மொத்தம் 80 இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  350 க்கும் அதிகமாக வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர் .  இன்றும் இரண்டு நிறுவனங்களில்  சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai , Income tax department raided palm oil mills in Chennai for the 2nd day
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்