×

காஷ்மீரில் பதுங்கு குழிகள் உள்ளதா? சர்வதேச எல்லையில் சிறப்பு குழு சோதனை

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரின் அர்னியாவில், சர்வதேச எல்லைப்பகுதியில் செவ்வாயன்று பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற ஒருவரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும் மற்றொருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சர்வதேச எல்லைப் பகுதியில் ஒன்றிய ரிசர்வ் படை சார்பில் நேற்று சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஊடுருவல் முயற்சிகளை தடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு குழுவினரை கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியிலும், எல்லையோர கிராமங்களிலும் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. டிரோன்கள் மூலமாக சந்தேகத்திற்குரிய ஆயுதங்கள் வீசப்பட்டுள்ளதா, பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனை நடத்தப்பட்டது.


Tags : Kashmir , Bunkers in Kashmir, international border, special team probe
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...