×

திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:
தென்காசியின் வேங்கடம்பட்டியை சேர்ந்த திருமாறன், தனது தந்தை ராமசுந்தரம் நினைவிடத்தை தேடி மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது வாழ்வின் தேடல் என்றே நான் உணர்கிறேன். இந்த பயணத்தில், திருமாறனின் அன்பு மட்டுமல்ல, கடல் கடந்து மலேசியாவில் வாழும் தமிழர்களின் பண்பாடும் வெளிப்படுகிறது.

50 ஆண்டுகளுக்கும் முன்னால் ராமசுந்தரம் வழங்கிய மிதிவண்டி குறித்து இன்றும் நினைவில் வைத்திருக்கும் பெருமாள், இளம் வயதிலேயே மறைந்துவிட்ட ராமசுந்தரத்தை மறவாத நாகப்பன் உள்ளிட்டோர் தமிழரின் தனித்துவமான பண்பாட்டின் அடையாளங்களே. தாயையும் இழந்த திருமாறன், ஆதரவற்றவராக அல்லாமல் பலருக்கும் ஆதரவு தரும் ஆலமரமாக இருப்பதை படித்தபோது நெகிழ்ந்து போனேன். வாழ்வின் பயணத்தில் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை கற்றுத்ருகின்றனர்.  திருமாறனின் தொண்டு சிறக்கட்டும். மனிதம் தழைக்கட்டும்.

Tags : May Thirumaran ,Chief Minister ,M.K.Stal , Thirumaran's charity, greetings from Chief Minister M. K. Stalin
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...