ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் தற்போதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் தற்போதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ஆளுநர் ரவியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என்று தலைமை செயலகத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.

இன்று அல்லது நாளைக்குள் ஆளுநரை சந்தித்து மீண்டும் வலியுறுத்த உள்ளோம். 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். ஆளுநரை சந்தித்து ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி கோருவோம் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

 ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி,  ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் மனஉளைச்சலும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. குடும்ப வன்முறைகளுக்கும் செல்போன்கள் அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது. ஆன்லைன் ரம்மி குறித்து வல்லுநர்களின் அறிக்கையைப் பெற்ற தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்றத் தயங்குவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டிவந்தன. .

Related Stories: