×

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷாரிக் பெரிய பை ஒன்றை தோளில் சுமந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!

கர்நாடகா: மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷாரிக் பெரிய பை ஒன்றை தோளில் சுமந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன் ஷாரிக் தோளில் பெரிய பையை சுமந்து கொண்டு தொப்பி அணிந்தவாறு செல்கிறார். குண்டு வெடிப்பு நடந்த நாகோரி பகுதிக்கு செல்லும் முன் பேருந்து நிலையம் அருகே இருந்த மதுபான கடையில் பதிவான சிசிடிவி காட்சி வெளியானது. ஷாரிக் தோளில் சுமந்து செல்லும் பையில் குக்கர் குண்டு இருந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags : Mangaluru ,Shariq , Mangaluru blast, Shariq, Pai, CCTV footage
× RELATED சென்னை-மங்களூரு எக்ஸ்பிரசில் கூடுதல் ஏசி பெட்டி இணைப்பு