டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 10 உதவி ஆணையர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட உதவி ஆணையர்கள் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். வணிகவரித்துறை இணை ஆணையர்களின் பணி திறன் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. இதில் வணிகவரி துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, ஆணையர் தீரஜ் குமார், இணை ஆணையர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வருவாயை பெருக்குவது, வரிஏய்ப்பை  தடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, வணிகவரி நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.  டிஎன்பிஎஸ்சிமூலம் வணிகவரி துறையில் உதவி ஆணையராக தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

Related Stories: