டெல்லியில் வீட்டை விட்டு சொல்லாமல் வெளியேறியதால் மகளை சுட்டுக் கொன்று உ.பி-யில் வீசிய தந்தை: 8 தனிப்படை; 20,000 செல்போன், 210 சிசிடிவி ஆய்வில் பரபரப்பு

மதுரா: டெல்லியில் வீட்டை விட்டு சொல்லாமல் மகள் வெளியேறியதால், அவரை தந்தையே சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. 8 தனிப்படை, 20 ஆயிரம் செல்போன், 210 சிசிடிவி ஆய்வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் யமுனா விரைவுச் சாலையின் வேளாண் ஆராய்ச்சி மையம் அருகே உள்ள முட்புதரில் சிவப்பு நிற டிராலி சூட்கேஷ் கிடந்தது. கடந்த 18ம் தேதி இந்த டிராலி சூட்கேஷை கைப்பற்றிய போலீசார், அதனை திறந்து பார்த்த போது இளம்பெண் ஒருவரின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ெதாடர் விசாரணையில் அந்தப் பெண் டெல்லியைச் சேர்ந்த ஆயுஷி யாதவ் (21) என்பது தெரியவந்தது.

அந்தப் பெண்ணின் தாயும், சகோதரரும் ஆயுஷி யாதவின் உடல் அடையாளத்தை உறுதிசெய்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் எஸ்பி எம்பி சிங் கூறுகையில், ‘கடந்த 17ம் தேதி ஆயுஷி யாதவ் தனது வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்த நாள் ஆயுஷி யாதவ் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அதன்பின் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் டிராலி சூட்கேஷில் பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் தலை, கை மற்றும் கால்களில் காயங்கள் இருந்தன. மார்பை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 20,000 செல்போன்கள் எண்கள் மற்றும் 210 சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

தொடர் விசாரணையில், ஆயுஷி யாதவை அவரது தந்தை நித்தேஷ் யாதவ் கொன்றது உறுதியாகி உள்ளது. ஆனால் அவர் தனது மகளை காணவில்லை என்று போலீசில் கூறியிருந்தார். உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து பிழைப்பு தேடி டெல்லி சென்ற நித்தேஷ் யாதவ், அங்கு எலெட்ரிக் கடை நடத்தி வருகிறார். தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மற்றும் சடலத்தை கொண்டு செல்ல பயன்படுத்திய கார் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. திடீரென சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய தனது மகள் ஆயுஷி யாதவ், மீண்டும் வீடு திரும்பியதால் ஆத்திரத்தில் நித்தேஷ் யாதவ் கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

இருந்தும் கொலைக்கான முழு காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் இளம்பெண் ஒருவர் 35 துண்டுகளாக ெவட்டப்பட்டு காதலனால் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் டெல்லியை சேர்ந்த மற்றொரு பெண் தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: