×

கடவூர் ஒன்றியத்தில் உலக கழிவறை தினத்தையொட்டி 20 ஊராட்சிகளில் தூய்மை நடைபயணம்-வீடுகளில் முறையான கழிப்பறை அமைக்க வலியுறுத்தல்

தோகைமலை : கடவூர் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் உலக கழிவறை தினத்தை ஒட்டி தூய்மை நடை பயணம் நிகழ்ச்சிகள் நடந்தது.கரூர் மாவட்டம், தமிழக அரசின் வழி காட்டுதலின்படி தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கடவூர் ஒன்றிய பகுதிகளில் 20 ஊராட்சிகளில் உலக கழிவறை தினத்தையொட்டி, தூய்மைநடை பயணம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் தனித்தனியே நடந்தது.

இதன் ஒரு பகுதியாக முள்ளிப்பாடியில் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நீலா வேல்முருகன் தலைமையில் உலக கழிவறை தினத்தைஒட்டி தூய்மை நடை பயணம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடந்தது. ஊராட்சி செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள கழிவு பொருட்களை மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் முறையான கழிப்பறையை அமைக்க வேண்டும். பெண்கள் உள்பட அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய கழிப்பறையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

பொதுக்கழிவு நீர் வடிகால் பகுதிகளில் குப்பைகளை போடாமல் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் நடைபயணமாக சென்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதேபோல் தரகம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளி தலைமையில் தூய்மை நடை பயணம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடந்தது. ஊராட்சி செயலாளர் சஞ்சய்காந்தி முன்னிலை வகித்தார். பண்ணப்பட்டியில் ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் அய்யனார் முன்னிலை வகித்தார். ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பூமா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

இதேபோல் மாவத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன் தலைமையில் தூய்மை நடைபயணம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மேலப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் அய்யனார் (பொ) முன்னிலை வகித்தார். தேவர்மலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நக்கீரன் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் சீரங்கன் முன்னிலை வகித்தார். கடவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் அன்பழகன் (பொ) முன்னிலை வகித்தார். காளையாபட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியமேரி தலைமையில் நடந்தது.

ஊராட்சி செயலாளர் ராஜா முகமது முன்னிலை வகித்தார். கீழப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் ஷாஜகான் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பாலவிடுதியில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.ஊராட்சி செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். பாப்பையம்பாடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சிறும்பாயி, வடவம்பாடியில் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தூய்மை நடைபயணம் நடந்தது.

ஊராட்சி செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.இதேபோல் செம்பியநத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி அறிவழகன் தலைமையில் நடந்தது ஊராட்சி மன்ற செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். தென்னிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

வரவனையில் கந்தசாமி தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் வீராச்சாமி முன்னிலை வகித்தார். வாழ்வார்மங்களத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் கந்தன் முன்னிலை வகித்தார். வௌ;ளபட்டியில் ஊராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் தலைமையில் நடந்தது.

மேலும் கீரனூரில் ஊராட்சி தலைவர் மகாலட்சுமி, மஞ்சாநாயக்கன்பட்டியில் ஊராட்சி தலைவர் மாரிதங்காள் ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்த தூய்மை நடை பயணம் நிகழ்ச்சிகளில் உதவி செயற்பொறியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : World Toilet Day ,Kadavur Union , Tokaimalai: In 20 Panchayats of Kadavur Union, Cleanliness Walks were held on the occasion of World Toilet Day. Karur District,
× RELATED பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை...