×

கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் காட்சியளித்த ஆண்டாள்

திருவில்லிபுத்தூர்: கார்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு,  திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கண்ணாடி மாளிகையில் ரெங்கமன்னாருடன் ஆண்டாள் நேற்று காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் ஏகாதசியன்று, கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகைக்கு ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னாரை அழைத்து வந்து, அங்கு சிறப்பு பூஜைகள் செய்வர்.

இதன்படி, நேற்று கார்த்திகை மாத ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோயிலிலிருந்து ஆண்டாள், ரெங்கமன்னார் சுவாமிகளை மேளதாளம் முழங்க கண்ணாடி மாளிகைக்கு அழைத்து வந்தனர். அங்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags : Karthikai Ekadasi ,Andala , On the occasion of Karthikai Ekadasi, Andal was seen in the glass house
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...