×

கோடியக்கரை சரணாலயத்தில் ஆர்டிக் பிரதேச பறவைகள் குவிந்தன; கண்கொள்ளா காட்சி

வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஆர்டிக் பிரதேச பறவைகள் குவிந்துள்ளது கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க கோடியக்கரைக்கு 290 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி அதிகமாக மழை பெய்து ஓய்ந்த நிலையில், நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள் வந்து குவிந்துள்ளது. ரஷ்யா, ஈராக், இலங்கையிலிருந்து பூநாரை மற்றும் கரண்டி மூக்குநாரை.

சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையை சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடற்காகம் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளது. பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ள பறவைகளை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம். பிளம்மிங்கோ (பூநாரை,) பறவைகள் வந்து குவிந்துள்ளன. இதற்கு காரணம் அதற்கு ஏற்ற உணவான பிளாங்டன் லார்வா அதிக அளவில் இந்த சரணாலயத்தில் கிடைக்கின்றன. மேலும் பறவைகள் வரத்து ஏற்ற சூழல் நிலவுவதால் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன.

வழக்கத்துக்கு மாறாக இலங்கையில் இருந்து பூநாரை, சிறு குஞ்சுகளும் வந்துள்ளன. கோடியக்கரை பறவைகள் சரணாலயம் 20 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. ஈரபுல நில பகுதியான இங்கு கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 2000க்கும் மேற்பட்ட புள்ளிமான், வெளிமான், குதிரை, நரி, குரங்கு, பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்கு சரணாலயத்தை அரசு 1967ம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது. 2002ம் ஆண்டு இந்த சரணாலயம் ராம்சார் சைட்டாக அறிவிக்கபட்டது. பறவைகளின் நூழைவாயிலாக கருதப்படும் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்தை அரசு பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் பறவைகளின் அழகை ரசிப்பதற்கு படகு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Arctic ,Kodiyakar Sanctuary , Artic birds flock to Kodiakkarai Sanctuary; Spectacular view
× RELATED புடினை கடுமையாக விமர்சித்து வந்தவர்...