×

 ரியல் எஸ்டேட் துறையில் முதன்முறையாக பில்ட் அசிஸ்ட் திட்டம் ஜி ஸ்கொயரில் அறிமுகம்

சென்னை: ரியல் எஸ்டேட் தொழில்துறையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மனை (பிளாட்) புரொமோட்டர் என புகழ்பெற்ற ஜி ஸ்கொயர் நிறுவனம், வீட்டுமனை வாங்குவது தொடர்பாகவும், வழிகாட்டல் வழங்கும்விதமாகவும் ‘ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட்’ என்ற திட்டத்தை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. ‘ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட்’ என்ற இந்த முனைப்புத் திட்டம் வாடிக்கையாளர்கள் சரியான இடத்தில் சரியான மனையை வாங்குவதற்கு யோசனை வழங்குவது, கட்டிட அனுமதியை அரசு முகமைகளிடமிருந்து பெறுவதற்கான செயல்முறை, நிலச்சொத்தை பதிவு செய்வதற்கான சட்ட மற்றும் ஆவணப்பதிவு செயல்முறைகள், கட்டுமானப் பணியில் கலந்தாலோசனை மற்றும் ஜி ஸ்கொயர் குடியிருப்பு சமூக வளாகத்தில் மனையை வாங்கிய வாடிக்கையாளர் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து குடியேறுவது வரை அனைத்து ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கும்.

வில்லா/வீடு வடிவமைப்பு மற்றும் அழகான முகப்பு தோற்றத்தை (எலிவேஷன்) உருவாக்கும் நிபுணர்கள் போன்ற, ரியல் எஸ்டேட் துறையில் இயங்கும் திறன்மிக்க சிறப்பு நிபுணர்களது சேவை கிடைக்கப்பெறுவதை ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட் திட்டம் ஏதுவாக்கும். உங்களது விருப்ப மற்றும் தேவையின்படி கட்டிடத்தை திட்டமிடும் ஃபுளோர் பிளானர்கள், இல்லத்தின் உட்புறங்களை அழகாக வடிவமைக்கும் இன்டீரியர் டிசைனர்கள், சிறந்த விலைக்கு ஹோம் அப்லையன்சஸ்களை பரிந்துரைக்கும் வல்லுநர்கள் மற்றும் கிரகப்பிரவேச நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து நேர்த்தியாக நடத்திக்கொடுக்கும் நிபுணர்கள் என அனைத்து நிபுணர்களது சேவைகளும் இத்திட்டத்தில் மனை வாங்குபவர்களுக்கு ஏதுவாக்கப்படும்.

இத்திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து, ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை செயலாக்க அதிகாரி என்.ஈஸ்வர் பேசுகையில், “மனை வாங்குபவர்களுக்கு இந்த வகை உதவியை ஜி ஸ்கொயர் நீண்டகாலமாக வழங்கி வந்துள்ளது. அதிகாரபூர்வமற்ற வகையில் 2420க்கும் அதிகமான வீட்டு மனைகளுக்கு மனை பராமரிப்பில் உதவியுள்ளோம். 360க்கும் கூடுதலான வாடிக்கையாளர்களுக்கு பூமி பூஜை நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம். 845க்கும் அதிகமான வீட்டுமனைகளின் பதிவு செயல்பாட்டில் உதவியிருக்கிறோம். இந்த அனுபவமே ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட் அடித்தளமாக இருக்கிறது. எவ்வித கூடுதல் செலவுமின்றி ஒரு மதிப்புக்கூட்டல் செயல்பாடாக வாடிக்கையாளர்களுக்கு உதவியை ஒரு பிளாட் புரொமோட்டர் நிறுவனம் வழங்குவது இந்தியாவில் இதுவே முதன்முறையாக இருக்கும்” என்றார். சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர், மைசூர் மற்றும் பெல்லாரி ஆகிய நகரங்களில் ஜி ஸ்கொயர் தற்போது தனது செயல்பாடுகளை கொண்டிருக்கிறது. இதுவரை 6000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு மிக்க வீட்டுமனைகளை வழங்கி இருக்கிறது.

Tags : G , A first in the real estate industry, Build Assist Program is introduced at G Square
× RELATED ஜி.எஸ்.டி. வரி அல்ல, வழிப்பறி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்