×

மெயின்புரியில் சமாஜ்வாடி, பாஜ நேரடி போட்டி

மெயின்புரி: உ.பி.யில் உள்ள மெயின்புரி மக்களவை தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் சமாஜ்வாடி, பாஜ இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதி எம்பி.யாக இருந்த சமாஜ்வாடி கட்சியினர் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், சமாஜ்வாடி சார்பாக இக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜ சார்பில் ரகுராஜ் சிங் ஷக்யா மற்றும் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் பரிசீலனையின்போது 13 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதனால்,  டிம்பிள் யாதவ் - ரகுராஜ் சிங் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.


Tags : Samajwadi ,BJP ,Mainpuri , Samajwadi, BJP direct contest in Mainpuri
× RELATED எம்பியாக வெற்றி பெற்றதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ்