×

மரக்காணம் அருகே காணிமேடு கிராமத்தில் மர்மநோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கந்தாடு ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள காணி மேடு, மண்டகப்பட்டு ஈஸ்வரன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடு, ஆடு ஆகிய கால்நடைகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரிப்பால் ஒரு சில கால்நடைகள் இறந்து விட்டன.

இது பற்றி தகவல் அறிந்த திண்டிவனம் கால்நடை வளர்ப்பு துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன், மரக்காணம் கால்நடைத்துறை மருத்துவர் சுமத்திரா ஆகியோர் தலைமையில் காணிமேடு கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து அப்பகுதியில் பாதிக்கப்பட்டிருந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர் மேலும் இந்த நோய் எவ்வாறு பரவுகிறது? இதனை இயற்கை மருத்துவ முறையில் எவ்வாறு குணப்படுத்துவது? போன்றவை குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வழங்கினர்.

Tags : Kanimedu ,Marakanam , Treatment of cattle infected with dysentery in Kanimedu village near Marakanam
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...