×

தமிழத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்கதமிழக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை உத்தரவு

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்து வரக்கூடிய 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியில் நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழக பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தல் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிவாகங்கள் எச்சரிக்கை யாக இருக்குமாறு தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக மேற்கொள்வதற்கு தேவையானவற்றை தயார்நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு பேரிடர் மீட்பு துறை முதன்மை ஆணையர் எஸ்.கே.பிரபாகர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 3 தினங்களுக்கு தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வரக்கூடிய நிலையில், 20- ம் தேதி தமிழகத்தில் இருக்க கூடிய செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதேபோல 21-ம் தேதி வடதமிழக மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாவூர்,  நாகப்பட்டினம், மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும், 22-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுளள்து.

இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து, அனைத்து துறை அதிகாரிகளும் விழிப்புடன் இருக்குமாறு தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Tags : District Administrations ,Tamil Nadu ,Nadu Revenue and Disaster Recovery Department , Heavy rain warning, district administrations, Tamil Nadu Revenue and Disaster Relief Department orders
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...